News October 13, 2025
கரூர் வழக்கு: CBI விசாரணை யாருக்கு கிடைத்த வெற்றி?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை CBI-க்கு SC மாற்றியுள்ளது. இது, TN அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசின் ஒருநபர் விசாரணை ஆணையம், ஐகோர்ட்டின் SIT-க்கு எதிராக TVK மற்றும் CBI விசாரணை கேட்டு 3 பேர் தொடர்ந்த வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மோசடியாக தொடரப்பட்ட வழக்குகள் எனவும், பாஜக விரும்பியதுபோல் CBI விசாரணை நடக்க உள்ளது எனவும் DMK வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.
Similar News
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹200 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹440 உயர்ந்திருப்பதால் ஒரே நாளில் ₹640 கூடியுள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,580-க்கும், 1 சவரன் ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
News October 13, 2025
RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.
News October 13, 2025
BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.