News October 18, 2025

தீபாவளி நாளில் வெளியாகிறது கருப்பு First Single

image

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று (அக்.20) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரிலீஸாக கோதாவில் குதிக்க வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், தீபாவளி அன்று பாடல் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள மாஸ் பாடலை கேட்க ரெடியா?

Similar News

News October 18, 2025

தங்கம் முதலீடு அல்ல, காப்பீடு: ஸ்ரீதர் வேம்பு

image

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது தான் ஒருவரின் Insurance என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மையால், வேகமாக ஏறும் மதிப்புகள் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 2008 நிதி நெருக்கடி போல மீண்டும் வரலாம் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 18, 2025

முன்னோர்கள்னா சும்மா இல்ல பாஸ்.. கொஞ்சம் இத பாருங்க

image

நமது பாரம்பரியமும், கலாசாரமும் அறிவியலுக்கு என்றுமே சவாலாகவோ (அ) திகைப்படையச் செய்யும்படியே இருக்கும். அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில்கள் 79° தீர்க்கரேகையில் ஒன்று போல் அமைந்துள்ளன. இந்த வாயைப் பிளக்கும் அதிசய கோயில்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த சிறப்புவாய்ந்த கோயில் எதுவென்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 18, 2025

தீபாவளிக்கு மொறு மொறு காரா சேவு ரெசிபி!

image

தீபாவளி பண்டிகைக்கு குலாப் ஜாமுன், ரவா லட்டு, அதிரசம் போன்ற இனிப்புகளை ருசிப்பது மட்டும் போதாது.. காரசாரமான சில பலகாரங்களையும் ருசிக்க வேண்டும். அந்த வகையில் மொறு மொறு சாத்தூர் காரா சேவு எப்படி செய்வது என இங்கே பகிர்ந்துள்ளோம். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!