News March 21, 2024
இப்போதே 2026க்கு அச்சாரம் போட்ட கருணாஸ்

பிரபல நடிகரான கருணாஸ் 2016இல் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் என ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த அவர், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணையலாம் என கருதப்படுகிறது.
Similar News
News January 7, 2026
ICC தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள்!

ஐசிசி டி20 WC வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இந்தியா ’ஏ’ பிரிவில் உள்ளது. இந்நிலையில் ICC தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் யார் என்பதை வலது பக்கம் Swipe செய்து நீங்கள் பார்க்கலாம். இதில் உங்க பேவரைட் யாரு?
News January 7, 2026
கூட்டணி அறிவிப்பு வெளியான உடனே அன்புமணிக்கு அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக EPS சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில், அதிமுகவுடன் மேற்கொண்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது; கட்சி விதிகளின்படி தனக்கு மட்டுமே கூட்டணி குறித்து பேச உரிமை இருப்பதாக அறிவித்து அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜன.9-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹320 உயர்ந்த நிலையில், மாலையில் சரசரவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹1,02,400-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் நம்மூரிலும் விலை குறைந்துள்ளது.


