News May 1, 2024
10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம்

வரும் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமாகிறது. ஏற்கெனவே, 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர் என அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் சிறந்து விளங்கிய துறைகள், அவரின் சாதனைகளும் அதில் இடம்பெற்றுள்ளது.
Similar News
News January 28, 2026
80 மணி நேரத்தில் 2 முறை DCM பதவியேற்ற அஜித் பவார்!

2019-ம் ஆண்டு அஜித் பவார் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய ஆண்டாகும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவரின் NCP கட்சி, பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளிக்க அஜித் பவார் DCM-ஆனார்(நவ. 23). ஆனால், அடுத்த 80 மணிநேரத்திலேயே, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற, ஆட்சி கவிழ்ந்தது. அப்போது, சிவசேனாவுக்கு ஆதரவளித்த அஜித் பவார் மீண்டும் DCM-ஆனார்(நவ. 26).
News January 28, 2026
தி.மலையில் தடையை மீறி சர்ச்சையில் சிக்கிய அர்ச்சனா!

2024 பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் அர்ச்சனா தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருவண்ணாமலை கோயில் மலையில் ஏற தடை உள்ள நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் இந்த மலை மலை உச்சிக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக அர்ச்சனா இன்ஸ்டாவில் பதிவிட, அது சர்ச்சையாகி இருக்கிறது. அந்த போஸ்ட்டை தற்போது இன்ஸ்டாவில் இருந்து டெலிட் செய்துவிட்டாலும், அர்ச்சனா மீது வனத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
News January 28, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் எந்த தொகுதியில் களமிறங்குவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். முதற்கட்டமாக காமராஜர் போட்டியிட்ட விருதுநகர், நாகர்கோவில் ஆகிய 2 தொகுதிகள் லிஸ்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விருதுநகரை தேர்வு செய்ய விஜய் விருப்பம் காட்டுவதாக பேசப்படுகிறது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?


