News August 7, 2024
ஆக.17இல் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?
News December 8, 2025
விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


