News April 2, 2025
சூர்யா படத்தால் கார்த்தி படத்திற்கு சிக்கல்

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் 2024 நவம்பரிலேயே டீசர் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த படம் எப்போதும் வெளியாகும் என தெரியவில்லை. இப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ‘கங்குவா’, ‘தங்கலான்’ தோல்வியால் நிதிச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பஞ்சாயத்தை முடித்தால் மட்டுமே கார்த்தி படம் வெளியாகுமாம்.
Similar News
News October 23, 2025
ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்க வேண்டும்: நயினார்

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு திமுக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்து 10 நாட்கள் ஆகியும் 8,000 மெ.டன் நெல் மூட்டைகளை, அரசு கொள்முதல் செய்யாததால் நனைந்து வீணானதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கவும் கோரியுள்ளார்.
News October 23, 2025
Hitman அரைசதம்!

இந்திய அணியின் ஓப்பனர் Hitman ரோஹித் சர்மா 74 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 17 ரன்களுக்குள் கில் & கோலி ஆகியோரை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ரோஹித்தும், ஷ்ரேயஸ் ஐயரும் வலுசேர்த்து வருகின்றனர். இந்திய அணி தற்போது வரை 21.5 ஓவர்களில் 94/2 ரன்களை எடுத்துள்ளது.
News October 23, 2025
பெரியார் வழியில் Dude பட இயக்குநர்

டியூட் படத்தில் தாலி செண்டிமெண்ட், ஆணவக்கொலை இதைபற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது பலதரப்பட்ட விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த டைரக்டர் கீர்த்தீஸ்வரன், இது தமிழ்நாடு. இங்கு ஒரு ‘பெரியவர்’ இருந்தார். அவர் வழியில் வந்துதான் நாங்கள் இதையெல்லாம் பேசுறோம். இதற்கு முன் நிறைய பேர் சொன்னதை, நாங்களும் அடுத்த தலைமுறைக்கு சொல்கிறோம். இனியும் சொல்வோம் என பதிலளித்துள்ளார்.