News December 9, 2024

கார்த்திகை தீபம்: சிறப்பு பஸ், ரயில் இயக்கம்

image

கார்த்திகை தீபம், பெளர்ணமியை முன்னிட்டு தி.மலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தி.மலைக்கு டிச.12, 13, 14, 15இல் 1,982 சிறப்பு பேருந்தும், மற்ற நகரங்களில் இருந்து மீதமுள்ள சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல், விழுப்புரத்தில் இருந்து தி.மலைக்கு டிச.13, 14, 15இல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

Similar News

News September 13, 2025

உடல் வலிமை பெற காலையில் இந்த யோகாவை பண்ணுங்க!

image

முதலில், பாதங்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு விரிப்பில் நேராக நிற்கவும். அடுத்து கைகளை மேலே உயர்த்தி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே முதுகை பின்னோக்கி வளைக்கவும்; கைகளையும் சேர்த்து பின்னால் எடுத்து செல்லவும். தோள்பட்டை காதுகளுக்கு அருகில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். இந்த யோகாவை 5-10 நிமிடங்கள் செய்து வந்தால் Spinal cord பலப்படும். Share it.

News September 13, 2025

Cinema Roundup : தள்ளிப்போகும் ‘கருப்பு’ ரிலீஸ்

image

* கவினின் ‘கிஸ்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. * தனது அடுத்த படம் வாடிவாசலா ? சிம்புவுடன் வடசென்னை யுனிவர்ஸா? 10 நாட்களில் தெரியும் என வெற்றிமாறன் தகவல். * பொங்கல் ரேஸில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் விலக இருப்பதாக தகவல் வாய்ப்புள்ளது. * பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு ஷாருக்கான் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

News September 13, 2025

Sports Roundup: பாக்சிங்கில் இந்திய மகளிர் அசத்தல்

image

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 57Kg எடைப்பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா, 80Kg எடைப்பிரிவில் நுபுர் ஷியோரன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். * டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். * ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம். * புரோ கபடி லீக்கில் பெங்களூரு புல்ஸ் 28-23 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.

error: Content is protected !!