News August 8, 2024
கார்த்தி- மாரி செல்வராஜ் கூட்டணி?

இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் புதிய படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறுவர்களை வைத்து இயக்கிய ‘வாழை’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். நடிகர் கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ‘கைதி 2’ படத்திற்கு பிறகு மாரி செல்வராஜுடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 8, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியில் (07.12.2025)-தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News December 8, 2025
போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த பாமக

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அன்புமணி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.
News December 8, 2025
WC வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகாவுக்கு ₹2 கோடி பரிசு

ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவல், காயம் காரணமாக அரையிறுதி & ஃபைனலில் விளையாடவில்லை. இந்நிலையில், WC-ல் அவர் அளித்த பங்கை கெளரவிக்கும் விதமாக, டெல்லி CM ரேகா குப்தா, பிரதிகாவுக்கு ₹1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அத்துடன், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பும் (DDCA), பிரதிகாவுக்கு ₹50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.


