News August 22, 2025

சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி?

image

ரஜினி – கமலை வைத்து லோகேஷ் இயக்கவுள்ளதால் ‘கைதி 2’ படப் பணிகள் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்திற்காக ஏற்கெனவே கார்த்தி கால்ஷீட் கொடுத்துள்ளதால், தற்போது அதைக் கொண்டு சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். இதன் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்குள் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளை சுந்தர் முடிக்கவுள்ளார். இந்த காம்போ எப்படி இருக்கும்?

Similar News

News March 28, 2026

பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

image

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 28, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 28, பங்குனி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News March 28, 2026

தங்க வர்த்தக மையமாகும் சிங்கப்பூர்

image

ஆசியாவின் முதன்மையான தங்கம் வர்த்தக மையமாக மாற உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் சிங்கப்பூர் புல்லியன் சந்தை சங்கம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றன. இந்தத் திட்டம் சிங்கப்பூரின் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதாரத் பன்முகத்தன்மையையும், உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!