News March 20, 2024

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘கார்த்தி 26’

image

கார்த்தி நடிக்கும் 26ஆவது படத்தின் OTT உரிமத்தை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘வா வாத்தியாரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 22, 2025

Diwali Sweets சாப்டீங்களா? இப்போ இதையும் செஞ்சிடுங்க

image

லட்டு, மைசூர் பாக், ரவா லட்டு, அதிரசம், முறுக்கு என தீபாவளி பலகாரங்கள் எல்லாம் ஒருவழியாக சாப்பிட்டு முடித்திருப்பீர்கள். இதனால் அடுத்த சில நாள்களுக்கு அஜீரணம், உப்புசம் என வயிற்று பிரச்னைகள் ஏற்படலாம். இவை ஏற்படாமல் இருக்க, இளநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடியுங்கள். இதனால், அடுத்த நாளும் நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது. வயிற்று பிரச்னைகளும் சரியாகும். SHARE THIS.

News October 22, 2025

FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக ஏற்கெனவே <<18068743>>15 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

News October 22, 2025

மழைக்காலத்தில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..

image

*ஈரமான கையோடு சுவிட்ச் on/ off செய்ய வேண்டாம்.
*மின்சார கம்பிகள் அறுந்திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
*இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மொபைல், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.
*குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம். *பழச்சாறுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். *பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.

error: Content is protected !!