News September 12, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கர்நாடகம்

கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் எடுக்கப்படும் எனவும், 2015-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிஹார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோரிக்கை உள்ளது.
Similar News
News September 12, 2025
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவிற்கு 27 ஆண்டுகள் + 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீவிர வலதுசாரியான போல்சனரோ, கடந்த 2022 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தற்போதைய ஆட்சியை கவிழ்த்து, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
‘லோகா’ யுனிவர்ஸில் புதிய ஹீரோக்கள் வந்தாச்சு

பெரும் எதிர்பார்ப்பு இன்றி வெளியான மலையாள மொழி படம் ‘லோகா’, ₹200 கோடியை தாண்டி வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து, இந்த படம் 5 பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதில், ‘சார்லி ஒடியன்’ என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும், ‘மைக்கேல் ஜாதன்’ என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. ‘லோகா’ யுனிவர்ஸ் எப்படி இருக்கிறது?
News September 12, 2025
ஆண்மையை இழக்க நேரிடும்… ஆண்களுக்கு WARNING!

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். SHARE IT