News May 1, 2024

தமிழகப் பயணிக்கு கர்நாடகா அரசு ₹1 லட்சம் இழப்பீடு

image

கடந்த ஆண்டு கர்நாடக அரசுப் பேருந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி பெங்களூருவுக்கு பயணித்தார். அப்போது, அவர் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்க்கு ₹200 லக்கேஜ் கட்டணம் செலுத்தும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அவர் ₹50 தர முன்வந்ததால், பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

விழுப்புரம்: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

விழுப்புரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 7, 2026

தங்கம் விலை மளமளவென குறைகிறது

image

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், USA வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக உள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் மதிப்பை வலுவடைய செய்யும் என்பதால், தங்கம் விலை சரிந்து சர்வதேச சந்தையில் 4,500 டாலருக்கு கீழ் வரக்கூடும். இதனால் உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 7, 2026

FLASH: ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

image

ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். அவர் சிறையில் இருந்தபடி முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது விதிகளின்படி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல், ஆலங்குளத்தில் ஹரி நாடார் 37,727 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!