News March 16, 2025
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட கர்நாடக டிஜிபி

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடக டிஜிபி (போலீஸ் வீட்டுவசதி கட்டுமானத் துறை) ராமசந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தங்கக் கடத்தலுக்கு ராமசந்திர ராவுக்கு இருக்கும் செல்வாக்கை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ராமசந்திர ராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
Similar News
News March 16, 2025
தினம் ஒரு பொன்மொழி!

▶கையாலாகாதவனுக்கு கடவுள் துணை; அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணரமுடியாத உனக்கு தலைவிதி. ▶பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும். ▶முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும். ▶விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும் – தந்தை பெரியார்.
News March 16, 2025
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு, பாலின வேறுபாடின்றி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை <
News March 16, 2025
IPL: இந்த அணிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

அடுத்த வாரம் IPL தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெங்களூருவில் உள்ள NCA இன்னும் அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் வரும் 23ம் தேதி SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. பங்கேற்றாலும், பேட்டிங் மட்டும்தான் செய்வார். விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.