News November 29, 2024
கர்மா சும்மாவே விடாது: வெச்சு செய்த நயன்தாரா

தனது திருமண ஆல்பத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற 24 நொடி சீனை, தனுஷின் அனுமதியில்லாமல் நயன்தாரா பயன்படுத்தினார். இதையடுத்து, அவரிடம் ₹ 10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், பொய்களால் ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தால், அதை கடனாக எடுத்துக் கொண்டு, கர்மா உங்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News April 27, 2025
ராசி பலன்கள் (27.04.2025)

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – பிரீதி ➤மிதுனம் – செலவு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அமைதி ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – புகழ் ➤தனுசு – கோபம் ➤மகரம் – ஆதரவு ➤கும்பம் – வீம்பு ➤மீனம் – நன்மை
News April 27, 2025
ஜோகோவிச் தோல்வி

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே அர்னால்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
News April 27, 2025
Live செய்வதை தவிருங்கள்.. ஊடகங்களுக்கு அரசு அட்வைஸ்

நாட்டின் நலனுக்காக, அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரலை செய்வதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.