News April 9, 2025
யோகியை சந்தித்த ‘கண்ணப்பா’ படக்குழு

உ.பி CM யோகி ஆதித்யநாத்தை நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா சந்தித்தார். 63 நாயன்மார்களில் ஒருவரான பக்த கண்ணப்பரின் கதையை மையாக கொண்டு ‘கண்ணப்பா’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரமோஷனுக்காக நடிகர்கள் பிரபுதேவா, மோகன்பாபு, அவரது மகன் விஷ்ணு ஆகியோர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திரைப்படக் குழு சார்பில், யோகிக்கு அழகிய ஓவியமும் பரிசளிக்கப்பட்டது.
Similar News
News December 3, 2025
இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!
News December 3, 2025
இப்படியெல்லாம பூச்சிகள் இருக்கிறதா?

ஆச்சரியமான இந்த உலகில் பல்வேறு விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி இனங்கள், இப்படியெல்லாம் இருக்கின்றதா என்று நம்மை வியப்படைய செய்கின்றன. இந்தப் பூச்சிகள், இயற்கையாகவே இலைகள், பூக்கள், குச்சிகள் போன்ற தோற்றத்தில் உள்ளன. இந்த விசித்திரமான பூச்சிகள் என்னென்னவென்று, மேலா போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
2-வது ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, தென்னாபிரிக்கா இடையிலான 2-வது ODI ராய்பூரில் இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ODI-ல் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், தொடரை சமன் செய்வதற்காக தீவிர வலைப்பயிற்சியில் SA வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பேட்டிங்கில் வலுவாக காணப்படும் IND, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.


