News April 14, 2025
800 படங்களில் நடித்த கன்னட காமெடி நடிகர் காலமானார்

கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்த்தன் (76) காலமானார். 800 படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். வயது மூப்புத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார். நடிப்புத் தொழிலின் இடையே சில காலம் அவர் வங்கியில் வேலை பார்த்தார். இதனால் பேங்க் ஜனார்த்தன் என்று அவருக்கு பெயர் வந்தது.
Similar News
News November 24, 2025
தற்குறி Vs ஆச்சரியக்குறி: அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

தவெக தொண்டர்கள் <<18366063>>தற்குறி<<>> அல்ல, ஆச்சரியக்குறி என விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும், யாரோடும் எங்களுக்கு பகை இல்லை எனவும் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
போனை திருடியவரை இப்படி ஈஸியா கண்டுபிடிக்கலாம்

உங்கள் போன் திருடுபோனால் எளிதில் கண்டுபிடிக்க சில ஆப்கள் உள்ளன. Bitdefender, Cerberus, Prey ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, பர்மிஷன்களை கொடுத்துவையுங்கள். உங்கள் போனை திருடியவர் SIM-ஐ மாற்றினாலோ, SWITCH OFF செய்ய முயற்சித்தாலோ (அ) தப்பான Password-ஐ உள்ளிட்டாலோ இச்செயலிகள் உடனடியாக Selfie எடுப்பதோடு, லொகேஷனையும் உங்களுக்கு SHARE செய்யும்.
News November 24, 2025
மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா? வந்தது அப்டேட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் விடுமுறை அளிக்காத மாவட்டங்களுக்கு மதியத்திற்குமேல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


