News June 20, 2024

கன்னட நடிகை ‘டீப் பேக்’ வீடியோ வெளியாகி பரபரப்பு

image

கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா முகத்தை பயன்படுத்தி ‘டீப் பேக்’ ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அவரது படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி, இது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News November 15, 2025

தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

image

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

News November 15, 2025

பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

image

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

error: Content is protected !!