News August 24, 2024

ரஜினி படத்தில் நடிக்கும் கன்னட நடிகர்?

image

‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பதாக முன்னர் தகவல் வெளியான நிலையில், கன்னட நடிகர் உபேந்திரா நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது. கர்நாடகாவில் பிரபல நடிகராக இருக்கும் உபேந்திரா, தமிழில் விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தில் நடித்திருந்தார்.

Similar News

News March 8, 2026

SPORTS 360°: பைனலுக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

image

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் பைனலுக்கு முன்னேறினார். *AFC மகளிர் ஆசியக் கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவை 0-11 என்ற கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. *காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஜிபி ஃபார்முலா 1 தொடரில் இருந்து வெர்ஸ்டப்பன் விலகினார். *ஹாக்கி மகளிர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் கடைசி வாய்ப்பாக இந்திய அணி உருகுவேவை எதிர்கொள்கிறது.

News March 8, 2026

ஏசியை பயன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்!

image

பல இடங்களில் வெயில் உச்சத்தை எட்டிவரும் நிலையில், வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் AC-யை பயன்படுத்த நிபுணர்கள் கூறும் டிப்ஸ் இதோ. *AC பயன்படுத்தும்போது கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம். *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும். *Eco mode, Energy Saving mode போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை சேமிக்கலாம்.

News March 8, 2026

பெண் இனத்திற்கே தலைகுனிவு: பிரேமலதா

image

பிறந்த சில நாள்களே ஆன <<19313133>>நாய்குட்டிகளை ஒரு பெண் சுவற்றில் தூக்கி அடித்து கொலை<<>> செய்த சம்பவம் தன் மனதை ஆழமாக உலுக்கியுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். அப்பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அச்செயலின் கொடுமை ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது என்றும், பெண் இனத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!