News March 15, 2025
பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி!

இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் சினிமாக்களை மட்டும் இந்தியில் டப் செய்யலாமா? என பவன் கல்யாண் கேட்ட கேள்விக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளை கடந்து திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் தங்களுக்கு உதவுவதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன் ‘GO BACK HINDI’ என பவன் கல்யாண் போட்ட பதிவையும், தனது பதிலடிக்கு கீழே கனிமொழி பகிர்ந்துள்ளார்.
Similar News
News March 15, 2025
இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
News March 15, 2025
மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்

மக்களின் நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறும்போது அவர்களது செயல்கள் தடம் மாறுகின்றன. போபாலில் 6 மாத குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருக்க, அதற்கு பேய் பிடித்திருப்பதாக மாந்திரீகர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், பேய் ஓட்டுவதாக கூறி, நெருப்பின் மேல் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 15, 2025
கொரோனா மாதிரியே புதிய வைரஸ்

கொரோனா போலவே மனிதர்களை பாதிக்கக்கூடிய புதிய வைரசினை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வவ்வால்களின் மீது நடத்தப்பட்ட சோதனையில், HKU5-CoV-2 என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 2019ஆம் ஆண்டு உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் போலவே தோற்றம் கொண்டிருப்பது, ஆய்வாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. ஹாங்காங் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், கூடுதல் ஆய்வுகளுக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.