News February 16, 2025
கனிமொழி எம்.பி. போராட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, திமுக எம்பி கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக எம்பி கனிமொழி, திமுக நிர்வாகிகள், மீனவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Similar News
News January 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 13, மார்கழி 29 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 13, 2026
புது சட்டம் அமலுக்கு வரும் முன்பே விலை உயர்வு!

புதிய கலால் திருத்த மசோதா வரும் பிப்.1-ல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, <<18461895>>சிகரெட்<<>> உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கான வரி பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்பவதால், அனைத்து வகையான புகையிலை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
News January 13, 2026
அமித்ஷாவை சந்தித்தாரா விஜய்?

CBI விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனால், NDA கூட்டணியில் தவெக இணைவது உறுதியானதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என தவெக தரப்பு உறுதியாக மறுத்துள்ளது. விசாரணை முடிந்து அறைக்கு வந்த விஜய், உடனே சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றதாக கூறப்படுகிறது.


