News October 1, 2025
தி.மலை வன்கொடுமை: கனிமொழி கண்டனம்

திருவண்ணாமலையில் இரு போலீஸார் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட SP விசாரணை மேற்கொண்டு வருவதாக தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸாரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 1, 2025
UG படிப்புகளில் சேர வயது வரம்பு உயர்வு

இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் UG படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளும், SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC பிரிவினர் மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டிலேயே அமலாகியுள்ளது.
News October 1, 2025
ஹமாஸுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும்: டிரம்ப்

காசா போரை நிறுத்த <<17871321>>டிரம்ப் கொண்டுவந்த 20 அம்ச திட்டத்தை<<>> இஸ்ரேல் PM நெதன்யாகு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதனால் கடுப்பான டிரம்ப், 4 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அவர்களுக்கு கெடு விதித்துள்ளார். மேலும், அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
News October 1, 2025
விடுமுறை கிடையாது.. அரசு புதிய அறிவிப்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் வரும் அக்.3-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு (TN FACT CHECK) அறிவித்துள்ளது. இதனால் 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், ஊருக்கு சென்றுவரலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. எனினும், அக்.3 விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.