News March 17, 2024
இறுதிக்கட்டத்தில் ‘கங்குவா’

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எடிட்டிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும், அதில் படத்தின் வெளியீட்டு தேதி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News January 16, 2026
டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
News January 16, 2026
முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News January 16, 2026
ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பகீர் மோசடி!

இந்திய ரயில்வேயில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசிய வெள்ளி நாணயத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி நடந்துள்ளது. உண்மையில் அவை செம்பினால் செய்யப்பட்ட போலி நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக Ex. ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில், FIR பதியப்பட்டுள்ளது. சுமார் ₹2,000 மதிப்புள்ள நாணயத்தில், வெறும் 0.23% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


