News January 22, 2025
பாஜக ஆதரவாளர்களுக்கு ஷாக் கொடுத்த கங்கனா!!

ஒரு கட்சியை சார்ந்தவர் படம் எடுக்கிறார் என்றால், தன் கட்சி சார்ந்த விஷயங்களையே அவர் சொல்வார் என்பதை கங்கனா உடைத்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை தழுவி கங்கனா இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் அவரை வலிமையான பிரதமராக காட்டியுள்ளது. இது பாஜக ஆதரவாளர்களை ஏமாற்றி இருக்கும். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதலில் விமர்சித்த காங்கிரஸ் தற்போது வரவேற்றுள்ளது.
Similar News
News December 4, 2025
அன்புமணி போலி ஆவணங்களை சமர்பித்தாரா?

பாமக தலைவராக அன்புமணி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் டெல்லி HC-ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அன்புமணி சமர்பித்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டே அவரை தலைவராக அங்கீகரித்ததாக EC விளக்கமளித்துள்ளது. ஆனால், அந்த ஆவணங்கள் போலியானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அன்புமணி தலைவர் இல்லையெனில் அதற்கான ஆவணங்களுடன் உரிமையியல் கோர்ட்டை ராமதாஸ் தரப்பு அணுகலாம் என EC தெரிவித்துள்ளது.
News December 4, 2025
டெல்லி காற்று மாசு: பிரியங்கா ஆவேசம்!

டெல்லி காற்று மாசுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேட்டியளித்த பிரியங்கா காந்தி, குழந்தைகள், முதியவர்கள் மூச்சு விடவே சிரமப்படுவதாக தெரிவித்தார். ஒருவரையொருவர் குறை சொல்ல இது வெறும் அரசியல் பிரச்னை அல்ல என்று கூறிய அவர், வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், சரியான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளும் துணை நிற்போம் என்று குறிப்பிட்டார்.
News December 4, 2025
சாலைகளை காணவில்லை: ஆர்.பி.உதயகுமார்

பருவமழையால் மதுரையில் ரோட்டையும் காணவில்லை, மேயரையும் காணவில்லை என ஆர்.பி.உதயகுமார் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி CM ஸ்டாலின் மதுரைக்கு செல்வதை மேற்கோள்காட்டிய அவர், மண்டல தலைவர்களையும், மதுரையின் சாலைகளையும் CM கண்டுபிடித்து தருவாரா என கேட்டுள்ளார். மேலும், விளம்பர வெளிச்சம் தேடுவதற்கு பதிலாக, மதுரைக்கு பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கு CM நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


