News August 3, 2024
மார்பிங் போட்டோவை பகிர்ந்த கங்கனா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பாஜக எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அடையாளத்தில் ராகுல் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பை விரும்புகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, கங்கனா மதங்களை இழிவுபடுத்துவதாக சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Similar News
News December 9, 2025
நெல்லை: அண்ணன் – தம்பிக்கு அரிவாள் வெட்டு

அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சகோதர்கள் விக்னேஷ் (30), சந்தோஷ் (26). இருவரும் நேற்று சேரன்மாதேவியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். டாஸ்மாக்கில் இருந்து இருவரும் கிளம்பும் போது ஒரு டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விக்னேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றனர். இதை தடுக்க சென்ற சந்தோஷ்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.


