News March 21, 2024
சத்குரு நலம்பெற கங்கனா ரனாவத் வாழ்த்து

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள ஈஷா அறக்கட்டளைத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவில் நீங்கள் குணமாக வேண்டும். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக CM, PM-ஆக அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மோடி. ஆனால், அவரிடம் சொந்தமாக நிலம், வீடு, கார் கூட இல்லை. 2024 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அவருடைய சொத்து மதிப்பு ₹3.2 கோடி தான். அவர் தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பணத்தை வங்கியில்தான் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். மேலும், அவர் யாருக்கும் கடன் கொடுத்ததும் இல்லை; வாங்கியதும் கிடையாதாம்.
News September 17, 2025
போன் ஹெல்தியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

போனுக்கும் full body health check-up செய்து, அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ‘Dialpad’-ஐ ஓபன் பண்ணுங்க *Brand-க்குரிய ரகசிய குறியீட்டை டயல் செய்யவும். குறியீட்டுக்கு <<17737284>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க *ஓப்பனாகும் மெனுவில் ஒரு பாகத்தின் பெயரை கிளிக் செய்தால், அது எத்தனை % சரியாக உள்ளது என காட்டும். SHARE IT.
News September 17, 2025
சீமான் மீது தவெகவினர் போலீஸில் புகார்

விஜய்யின் அரசியல் வருகையை முதலில் வரவேற்றவர் சீமான். ஆனால், சமீபகாலமாக உன்னை(விஜய்யை) யார் அரசியலுக்கு வா என்று அழைத்தது என்ற தொனியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் தவெகவினர் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யை சீமான் ஒருமையில் பேசியதாக கூறி தவெகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.