News April 5, 2024
தப்பை சமாளிக்கும் கங்கனா ரணாவத்

நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத், சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசியிருந்தார். இதனை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியபின், தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 1943ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து தன்னைத் தானே பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அறிவித்துக் கொண்டதை சுட்டிக் காட்டியிருக்கும் கங்கனா, அதைதான் குறிப்பிட்டதாக சமாளித்து வருகிறார்.
Similar News
News March 18, 2026
நெல்லை: தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது – ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீரவநல்லூரில் இன்று அளித்த பேட்டியில், அதிமுக கோட்டை என எதுவும் இல்லை. அதில் ஓட்டை விழுந்து நிறைய காலம் ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. நான் பதவியை எதிர்பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவில்லை தொண்டனாகத் தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தேன்.
ஸ்டாலின் உத்தரவிட்டால் தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டுயிட முடியும் என்றார்.
News March 18, 2026
யாருடன் கூட்டணி? ராமதாஸ் முக்கிய முடிவு!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூட உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அங்குச் செல்ல வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி தடையாக இருப்பதால் ராமதாஸ் தரப்பு பெரும் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. இதனால், ராமதாஸின் முடிவுக்காக ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
News March 18, 2026
டீ-க்கு ₹12, மட்டன் பிரைக்கு ₹200

தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், எந்தெந்த உணவுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற புதிய விலை <<19413031>>பட்டியலை <<>>ECI வெளியிட்டுள்ளது. 2 இட்லி ₹40, வடை ₹15, பொங்கல் ₹50, கிச்சடி ₹60, 2 பூரி, மசால் ₹60, பரோட்டா ₹40, காபி ₹18, டீ ₹12, மோர் ₹13, எலுமிச்சை ஜூஸ் ₹15, ரோஸ் மில்க் ₹40, சைவ சாப்பாடு ₹110, அசைவ சாப்பாடு ₹350, சிக்கன் பிரை (100கி) ₹100, மட்டன் பிரை (100கி) ₹200, சமோசா ₹20, பப்ஸ் ₹20.


