News June 15, 2024
ஈஷா யோகா மையத்தில் கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அபார வெற்றிபெற்றார். இதையடுத்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், அதன்பின் தரிசனத்திற்காக கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்தார். அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஆதி யோகியை வழிபட்ட அவர், நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
Similar News
News March 1, 2026
இளம்பெண் தற்கொலை.. ஜோதிடத்தால் மன அழுத்தமா?

பெங்களூருவில் சில நாள்களில் காதல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வித்யஜோதி(29) என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோதிடர் ஒருவர் அவருக்கு குறுகிய ஆயுள் இருப்பதாக கூறியதை நம்பி, பரிகாரம் என்ற பெயரில் 9 நாள்கள் வித்யஜோதி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. 9-ம் நாளில் கோயிலுக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோதிடம் மன அழுத்தத்தை கொடுத்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
மூன்றே மாதங்களில் உலக நாடுகளை அதிர வைத்த USA!

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து USA அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜனவரியில் வெனிசுலா பிரதமர் நிக்கோலஸ் மடுரோ கைது செய்யபட்ட நிலையில், பிப்ரவரியில் மெக்சிகோ போதை பொருள் மன்னன் எல் மென்சோ கொல்லப்பட்டார். அதற்கு USA உதவியதாக கூறப்படும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமெனியும் மரணமடைந்துள்ளார். சர்வதேச அரசியலில் அதிரடி காட்டிவரும் USA-வின் அடுத்த நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
News March 1, 2026
விஜய் – சங்கீதா விவகாரம்.. த்ரிஷா பதிவு வைரல்

விஜய் – சங்கீதா விவகாரம், கோலிவுட் தாண்டி அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை த்ரிஷா தான் என்று SM-ல் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், த்ரிஷாவின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்றையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ‘Love always wins’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குடும்ப விவகாரத்தில் தலையிடுவது தவறு என சிலர் கூறி வருகின்றனர்.


