News July 24, 2024
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் 3 பேர் முதல் பத்து இடங்களுக்கு வந்துள்ளனர். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கி அணியின் ஜோ ரூட் 852 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் 4ஆவது இடத்தில் உள்ளார். அதை தொடர்ந்து இந்தியாவின் ரோகித் சர்மா 7, ஜெய்ஸ்வால் 8, கோலி 10 இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 20ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது புதிய அப்டேட்

தமிழ்நாட்டில் ஏப்.15-ல் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மற்றொருபுறம் ECI-யும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் தமிழகம் வருகை தந்துள்ளது. சுமார் 70 பேர் கொண்ட CRPF வீரர்கள் சென்னை KK நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
News March 7, 2026
ஈரான் போர் இப்போதைக்கு முடியாது போலயே?

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரை நிறுத்த பல நாடுகள் சமரசம் செய்ய முன்வருவதாக ஈரான் அதிபர் மசூத் கூறியுள்ளார். உலக அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்ற அவர், ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தயங்கமாட்டோம் எனவும் பேசியுள்ளார். மேலும், சமரசம் செய்யும் நாடுகள் முதலில் இஸ்ரேல், USA-விடம் அதுபற்றி பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
நேபாளத்தில் பிரதமராகும் இளம் ‘ராப்’ பாடகர் ஷா!

அண்டை நாடான நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி(RSP) அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடந்த 165 தொகுதிகளில் 101 இடங்களை RSP கைப்பற்றியுள்ளது. இதனால், பிரபல ‘ராப்’ இசை பாடகரான பாலேந்திர ஷா(35) பிரதமர் நாற்காலியில் அமர உள்ளார். ஊழலற்ற நிர்வாகத்தை பேசி வரும் இவர், 2022 தேர்தலில் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.


