News October 22, 2025
ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா சாப்டர் 1’

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஆங்கில பதிப்பு வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகளை குறைத்து, ஆங்கில பதிப்பு வெளியாக உள்ளது. அதன்படி, ஆங்கில பதிப்பின் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 14 நிமிடங்கள் 45 விநாடிகள் ஆகும். பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம், இதுவரை உலகளவில் ₹800 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 24, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

10, +2 பொதுத்தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தற்போதே தயார் செய்துவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஸிடம் பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா இன்று ஒப்படைத்துள்ளார். நவ.4-ம் தேதி தேர்வு தேதி அடங்கிய விவரங்களை அமைச்சர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன மாணவர்களே, ரெடியா..!
News October 24, 2025
திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 24, 2025
பிஹார் தேர்தல்: பல துணை முதல்வர் வேட்பாளர்கள்

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


