News October 2, 2025

‘காந்தாரா சாப்டர் 1’ First Review

image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘காந்தாரா சாப்டர் 1’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மாஸான இன்ட்ரோ, அட்டகாசமான இண்டர்வெல், தரமான க்ளைமாக்ஸ், அசத்தும் VFX என படத்தை பார்த்த மக்கள் சிலாகித்துள்ளனர். இருப்பினும், சிலர் படத்தின் கதை சற்று ஸ்லோவாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News

News October 2, 2025

தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

image

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

Cinema Roundup: SK ஜோடியாக நடிக்கும் ரஷ்மிகா மந்தனா

image

*’மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாகிறது. *சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். *விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா 2’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

News October 2, 2025

இந்திய அணியின் பிளேயிங் 11

image

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் ரெட்டி அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியா பிளேயிங் 11 : கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.

error: Content is protected !!