News October 4, 2025
2 நாளில் ₹100 கோடி தாண்டிய ‘காந்தாரா சாப்டர் 1’ வசூல்

தியேட்டர்களை அதிர வைத்துக்கொண்டிருக்கும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’, 2 நாள்களில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளிலேயே ₹61.85 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து 2-ம் நாளில் ₹43.65 கோடியை வசூலிக்க, ஒட்டுமொத்தமாக ₹105.5 கோடியை படம் இதுவரை ஈட்டியுள்ளது. 2022-ல் வெளியான ‘காந்தாரா’ படம் ஒருவாரத்தில் ₹30.3 கோடியை வசூலித்திருந்தது.
Similar News
News October 4, 2025
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
News October 4, 2025
35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமா செய்யணும்!

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
News October 4, 2025
BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.