News March 16, 2024

காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024)  விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Similar News

News November 24, 2025

காஞ்சி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News November 24, 2025

வண்டலூர்: காதலியை தொல்லை செய்த வாலிபர் கைது!

image

வண்டலூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படிக்கும் போது சக நண்பரை காதலித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ஆஸ்கர்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News November 24, 2025

காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

image

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!