News March 27, 2024
ரீ-மேக் ஆகும் கமலின் ‘சத்யா’ திரைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988இல் வெளியான ‘சத்யா’ திரைப்படம், ரீ-மேக் செய்யப்பட உள்ளது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கெனவே, ஹிந்தியில் இருந்து ரீ-மேக் செய்யப்பட்டது தான் சத்யா. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான இது, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News November 17, 2025
பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்: ஏ.பி.முருகானந்தம்

பிஹாரை தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற பொய்யை ஆளும்கட்சி தொடர்ந்து கட்டமைத்து வருகின்றது. ஆனால், அந்த பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையை சொல்லாமல், யாரும் அரசியல் செய்ய முடியாது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்றார்.
News November 17, 2025
சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராஜமௌலி

வாரணாசி பட விழாவில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என ராஜமௌலி கூறியிருந்தார். இதனையடுத்து, அவரது பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனக்கு ராமரை பிடிக்காது, கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராமர் பிடிக்காது என்றால் அவர் பெயரில் படங்கள் எடுத்து ஏன் பணம் சம்பாதிக்கிறார்கள் என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News November 17, 2025
பிஹாரில் ஆதிக்கம் செலுத்தும் பெண் MLA-க்கள்

பிஹாரில் பெண் MLA-க்கள் ஆதிக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 26 பெண்கள் வெற்றிபெற்ற நிலையில், தற்போது 29-ஆக உயர்ந்துள்ளது. இதில், 26 பேர் NDA கூட்டணியை சேர்ந்தவர்கள். கடந்த முறை குற்றப் பின்னணி கொண்ட MLA-க்களின் எண்ணிக்கை 163-ஆக இருந்த நிலையில், இது இந்த முறை 130-ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பட்டதாரிகள் எண்ணிக்கை 149-லிருந்து 147-ஆக குறைந்துள்ளது.


