News June 28, 2024
கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இந்தியன் – 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ₹150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Similar News
News March 1, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க
News March 1, 2026
‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News March 1, 2026
World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?


