News October 6, 2025
விஜய்க்கு கமல் வேண்டுகோள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல் ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி அளித்தார். இதனையடுத்து பேட்டியளித்த அவர், ஒரு தலைவராக அவர்(விஜய்) செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், எதிரியாக இருந்தாலும் அனுபவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் கமல் குறிப்பிட்டார்.
Similar News
News October 6, 2025
இனி வெள்ளம், கனமழைக்கும் இன்சூரன்ஸ்.. உடனே பணம்!

வெள்ளம், கனமழை, வெப்ப அலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்குவது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இனி நமது உடமைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். இது வழக்கமான காப்பீடாக இல்லாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட உடனே பணம் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 6, 2025
நீரிழிவு நோயா? இந்த பழங்கள் சாப்பிடலாம்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதால், பழங்களையும் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், குறைந்த சர்க்கரை அளவு, அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், சர்க்கரையை சீராக வைத்திருக்கும். அது என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த வேறு பழம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
தீபாவளி போனஸ் ₹3,000.. அறிவித்தது தமிழக அரசு

அரசு பொதுத்துறை சி, டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு <<17928254>>20% தீபாவளி போனஸ்<<>> வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்தார். இதில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ₹3,000 கருணை தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான போனஸ் தனியாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.