News May 12, 2024
கமலின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியீடு

இந்தாண்டின் பிற்பாதியில் கமலின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏ.டி’ ஜூன் 27ஆம் தேதியும், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ ஜூலை மாதமும், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளன. 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் 3 படங்கள் 6 மாதங்களுக்குள்ளாகவே வெளியாக உள்ளது. 1989இல் சாணக்கியன், வெற்றி விழா, இந்திரன் சந்திரன் ஆகிய 3 படங்கள் வெளியானது.
Similar News
News November 19, 2025
ராசி பலன்கள் (19.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 18, 2025
FLASH: அல்-ஃபாலாஹ் பல்கலை., சேர்மன் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள் ஹரியானாவிலுள்ள அல்-ஃபலாஹ் பல்கலை.,யுடன் தொடர்புடையவர்கள். இந்நிலையில், அதன் நிறுவனர் ஜே.ஏ.சித்திக் என்பவரை ED கைது செய்துள்ளது. யுஜிசி அங்கீகாரம் தொடர்பாக பொய்யான தகவலை அளித்தது, நிதி மோசடி குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு இவர் நிதியுதவி செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
News November 18, 2025
வாகன கட்டணம் 10 மடங்கு உயர்ந்தது

வாகன fitness test கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 3 அடுக்கு (10-15 yrs, 15-20, 20-25) முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். 20 yrs பழைய வாகனத்துக்கு கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, டிரக்/பஸ் -₹25,000, கமர்ஷியல் வாகனம்(MCV)-₹20,000, கமர்ஷியல் வாகனம்(LCV)- ₹15,000, 3 வீலர் -₹7,000, பைக்-₹2,000 ஆக உயரும். 15 yrs-க்கு குறைவான பைக்-₹400, LMV-₹600, MCV-₹1000 ஆக கட்டணம் இருக்கும்.


