News October 26, 2025
மீண்டும் அமெரிக்க அதிபர் ரேஸில் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபராக இருப்பார் என தெரிவித்த அவர், அது தானாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 2028 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் தான் பின்தங்கியிருப்பதாகக் கூறும் கருத்துக் கணிப்புகளை பற்றி கவலையில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.
Similar News
News October 26, 2025
திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு: சீமான்

சென்னையில் பேனா மை கொட்டியதற்காக 5-ம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுக வட்டச்செயலாளரின் தலையிட்டால் போலீஸ் தலையிடவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இது திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு எனவும் விமர்சித்துள்ளார்.
News October 26, 2025
விரைவில் OTTக்கு வரும் காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 ₹800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே இப்படத்தின் OTT உரிமத்தை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தென்னிந்திய மொழிகளில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாம். திரையரங்கு விதிகளின் காரணமாக இந்தியில் மட்டும் நவம்பர் மாதம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. OTT காந்தாரா பாக்க ரெடியா?
News October 26, 2025
வரலாற்றில் இன்று

*1947 – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள்
*1950 – கொல்கத்தாவில் முதல் தொண்டு நிறுவனத்தை அன்னை தெரசா தொடங்கினார்
*1965 – பாடகர் மனோ பிறந்த நாள்
*1985 – நடிகை அசின் பிறந்த நாள்
*1999 – SC ஆயுள் தண்டனைக்கான காலத்தை 14 ஆண்டுகளாக நிர்ணயித்தது
*2015 – ஆப்கானித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 398 பேர் பலி


