News August 9, 2024
கமலா ஹாரிஸால் அதை சமாளிக்க முடியாது: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் கமலா ஹாரிஸை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். வாஷிங்டனில் பேட்டியளித்த டிரம்ப், “நாம் ஒரு உலகப் போரை எதிர்நோக்கி இருக்கிறோம். கமலா ஹாரிஸால் இதுபோன்ற போரை சமாளிக்க முடியாது. அவர் ஜோ பைடனை விட மோசமானவர்” என குறை கூறினார்.
Similar News
News December 8, 2025
விழுப்புரம்: கார் ஏறி முதியவர் பரிதாப பலி!

சென்னை புழல் கதிர்வேட்டைச் சேர்ந்த 68 வயது சேவியர் பெர்ணான்டோ, கடந்த 1-ம் தேதி திண்டிவனம் சாரம் லேபை பகுதியில் சாலையைக் கடந்தபோது, அவர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், ஓலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டுச் சென்ற காரைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.
News December 8, 2025
வங்கியில் 996 காலியிடங்கள், ₹51,000 சம்பளம்: APPLY

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <


