News February 13, 2025
கமல்- உதயநிதி திடீர் சந்திப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739433324392_1173-normal-WIFI.webp)
மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய புகைப்படங்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி மநீமவுக்கு அளிக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவும் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
Similar News
News February 13, 2025
இன்று முதல் வீடு- வீடாக தொழுநோய் பரிசோதனை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739436802680_1142-normal-WIFI.webp)
TN முழுவதும் இன்று முதல் வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முன்கூட்டியே தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வீடு- வீடாக மக்களிடம் பரிசோதனை நடத்த பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
News February 13, 2025
சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739440172621_1031-normal-WIFI.webp)
நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பான உணர்வுகளை கதைக்களம் மையமாக கொண்டுள்ளதாம். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை காலத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2025
லோக்சபா ஒத்திவைப்பு: மீண்டும் மார்ச் 10ல் கூடுகிறது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443164314_1328-normal-WIFI.webp)
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முதல் பகுதியின் இறுதி நாளில் புதிய வருமான வரி மசோதா, வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டன. லோக் சபாவை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் புதிய வருமான வரி மசோதாவை FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடக்கிறது.