News March 22, 2025
ஆக்ரோஷத்துடன் கமல் – சிம்பு!! வெளியான புது போஸ்டர்

நாயகனுக்கு பின் கமலும் மணிரத்னமும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் சிம்புவும் நடித்திருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கமல் மற்று சிம்புவின் ஆக்ரோஷமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News July 10, 2025
அந்த அசிங்கத்தால் சினிமாவை விட்டேன்: விஷ்ணு விஷால்

பல தடைகளை உடைத்து நடிகரான விஷ்ணு விஷால் வளரும்போது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘நான்’, ‘காதல்’ போன்ற படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் சினிமா ஆசையை கைவிட முடிவெடுத்தாராம் அவருக்காக DIG-யாக இருந்த அவரது தந்தையும் வாய்ப்புக்கு அலைந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார். அந்த வலிகளை தாண்டி இன்று நடிகர், தயாரிப்பாளர் என அசத்தி வருகிறார். Never give up.
News July 10, 2025
இதெல்லாம் விந்தணுக்களை பாதிக்கும்… நண்பர்களே உஷார்!

ஆரோக்கியமான ஆணின் 1 மில்லி விந்துவில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் இருக்கும். அதிகளவு புகை, மது பழக்கம், போதைப்பொருள் உட்கொள்ளுதல், அதிக உடல் எடை, வெப்பநிலை உள்ளிட்டவை விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். துத்தநாகம், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் விந்தணுவை வேகமாக உற்பத்தி செய்ய உதவுகின்றன. விழிப்போடு இருப்பது நலம் நண்பர்களே..!
News July 10, 2025
துரோகம் செய்வதில் இபிஎஸ் கில்லாடி… ஸ்டாலின் தாக்கு

இபிஎஸ்ஸுக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டுமே என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூர் விழாவில் பேசிய அவர், வெளிமாநில மக்கள் கூட தமிழகம் குறித்து பெருமையாக பேசுவதாகவும், ஆனால் இபிஎஸ்ஸுக்கு இது தெரியாது, அவருக்கு தெரிந்தது துரோகம் மட்டுமே என்றார். பதவிக்கு கொண்டு வந்தவருக்கும் (சசிகலா), அதிமுக, அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்தவர் இபிஎஸ் என்றும் ஸ்டாலின் சாடினார்.