News September 25, 2025
தன் சாதனையை தகர்த்த சிறுமிக்கு கமல் பாராட்டு

தேசிய விருது வென்ற 4 வயது சிறுமியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘நாள் 2’ படத்திற்காக சிறுமி த்ரிஷா தோஷர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வென்றிருந்த நிலையில், நான் 6 வயதில் தான் வென்றிருந்தேன், அதை தற்போது நீங்கள் முறியடித்துள்ளீர்கள் என கமல்ஹாசன் x-ல் வாழ்த்து கூறியுள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக கமல் 6 வயதில் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 25, 2025
இந்தியா – வங்கதேச உறவில் விரிசல்: முகமது யூனுஸ்

வங்கதேசம் – இந்தியா இடையேயான உறவில் விரிசல் இருப்பதாக வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். ஐநா நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், இது இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும், வங்கதேச பிரச்னையின்போது சில இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 25, 2025
கொசுக்களுக்கு பிடித்த BLOOD GROUP எது தெரியுமா?

அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து கடிப்பதில் முதல் இடத்தில் ‘O’ வகை பிளட் குரூப்பினரும், 2-வது இடத்தில் ‘B’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் ஆசிட் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
News September 25, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறையையொட்டி TNSTC சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. நாளை(செப்.26) முதல் செப்.30 வரை பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 3,130 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாகவும் <