News August 7, 2025
PM மோடியை சந்தித்த கமல்: கீழடி குறித்து கோரிக்கை

PM மோடியை MP கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி தனது X பதிவில், கலைஞராகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் PM மோடியை தான் சந்தித்ததாகவும், அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதில் தலையாயது கீழடி என குறிப்பிட்டுள்ளார். தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு மோடி உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
BREAKING: செங்கையில் உடல் கருகி 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் இன்று கொசுவத்தியால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த கணவர் பார்த்திபன் (33), மனைவி ஜெயசித்திரா(29) மற்றும் இரண்டரை வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். உடல்களை மீட்டு மறைமலைநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் கூராய்வுக்கு அனுப்பிய வைத்தனர்.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு அவசர ஆலோசனை

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். TN-ல் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
தமிழக தேர்தல் தேதி… புதிய தகவல் வந்தது

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேற்று ECI ஆய்வு செய்து முடித்துள்ளது. இதனால், மார்ச் 15-ம் தேதி தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை, மதுரை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


