News April 6, 2024

கமல் சரித்திரத்தை ஒழுங்காக படிக்க வேண்டும்

image

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக சரித்திரத்தை மாற்றிப் பேசுவதாக மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘சரித்திரத்தில் நடந்த உண்மையை நாங்கள் பேசுகிறோம். பிசியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமல், ஷூட்டிங்கிற்கு இடையே வந்து பேசினால் இப்படித்தான் இருக்கும். சரித்திரத்தை ஒழுங்காக படித்துவிட்டு வந்து அவரை பேசச் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 9, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

image

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 9, 2026

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.

News March 9, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.

error: Content is protected !!