News March 30, 2024

கேரள வேட்பாளரை ஆதரித்து கமல் பிரசாரம்

image

கேரளாவின் வடகரா தொகுதியில் இடது முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மநீம தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இம்முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறிய அவர், மத்தியில் சைலஜா போன்றவர்கள் நமது குரலை எதிரொலிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

Similar News

News February 14, 2026

வெள்ளி விலை ஒரே அடியாக குறைந்தது!

image

சர்வதேச சந்தையின் தாக்கத்தால் <<19138050>>தங்கம் விலை இன்று<<>> உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28g) 2% உயர்ந்து $77 ஆக உள்ளபோதிலும், இந்திய சந்தையில் வெள்ளியின் விலை உயரவில்லை. கடந்த 29-ம் தேதி பார் வெள்ளி 1 கிலோ ₹4,25,000-க்கு விற்பனையான நிலையில், தலைகீழாக குறைந்து தற்போது ₹2,80,000 என்ற நிலையில் நீடிக்கிறது. இதனால், வெள்ளியில் முதலீடு செய்ய நினைப்போர் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.

News February 14, 2026

காதல் வெற்றியடைய எது முக்கியம்?

image

காதலுக்கு அன்பையும் தாண்டி மரியாதையும், சுதந்திரமும் அவசியம். இந்த காலக்கட்டத்தில் காதலிப்பவர்கள் 1+1=2 என நினைப்பதை விட்டுவிட்டு 1+1=11 என நினைக்க வேண்டும். புரியவில்லையா? என்னதான் இருவர் காதலில் இருந்தாலும், இருவரும் தனி தனி Individual, இருவருக்கும் தனியாக ஒரு வாழ்க்கை, Privacy இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஒருவரின் Boundaries-ஐ மற்றொருவர் மதிக்க வேண்டும். இதுவே காதலை அதிகரிக்கும். SHARE.

News February 14, 2026

பெண்ணை பற்றி அவதூறாக பேசுவது அழகல்ல: தமிழச்சி

image

பெண்களை கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரிக அரசியல் என நயினார் நாகேந்திரனுக்கு திமுக MP தமிழச்சி தங்கப்பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். இந்நாட்டை ஆளும் பாஜகவின் TN மாநில தலைவர், அரசியல் கருத்துகளை கூறும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணை பற்றி, அவதூறாக பேசுவது அழகல்ல என விமர்சித்துள்ளார். <<19135589>>விஜய் – த்ரிஷா குறித்து <<>>நயினார் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை அடுத்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!