News August 20, 2025
கார்த்தியை அழைத்து பேசிய கமல்? காரணம் என்ன?

‘கூலி’ முடிந்தவுடன் லோகேஷ் கைதி 2 பண்ணுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ரஜினி, கமல் வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் கார்த்தியை அழைத்து பேசியிருப்பதாகவும், கார்த்தி சம்மதத்துடனே தற்போது லோகேஷ் ‘கைதி 2’ பணிகளை விட்டுவிட்டு ரஜினி கமல் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 20, 2025
பட்டுக்கோட்டையில் போட்டி? TTV தினகரன் பதில்

2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவதாக TTV தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக, பாஜக கூட்டணியில் போட்டியிடுமா என்பது டிசம்பர் இறுதியில் தெரியவரும் என்று TTV கூறியுள்ளார். அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அமமுக NDA-விலேயே உள்ளதாக நயினார் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து பாஜகவிடம் கேளுங்கள் என EPS கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 20, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ₹73,440-க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ₹9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.
News August 20, 2025
தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் மோடி: H ராஜா

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.