News December 10, 2024
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ், லியோ படத்தை இயக்கினார். பின்னர் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் கமல், லோகேஷ் கனகராஜ் ஜோடி மீண்டும் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது விக்ரம் படத்தின் 2ஆவது பாகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 4, 2026
மகளிர் தினத்தில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்டவை தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தனித்து களம் காணும் விஜய்யின் தவெக, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ம் தேதி தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட உள்ளாராம். அதில் மகளிரை குறிவைத்து பல திட்டங்கள் இருக்கும் என சொல்லப்படும் நிலையில், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
News March 4, 2026
தேர்தல் வாக்குறுதிகள்.. EPS முக்கிய அறிவிப்பு

அனைத்து குடும்பத்தினருக்கும் கருணைத் தொகை ₹10,000, மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000 உள்பட 3 கட்ட வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை வார்டு வரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக மா.செ., ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
News March 4, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


