News January 6, 2025
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: HC முக்கிய உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கைதானவர்கள் 6 மாதத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில், இதற்கு மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டிய தேவை ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது.
Similar News
News January 14, 2026
திருச்செந்தூரில் நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் கோவில் நடை திறக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 14, 2026
பாஜகவுடன் விஜய் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

BJP தங்களின் கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி உறுதிப்படுத்தியுள்ளார். திருவெற்றியூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் BJP வளர்வது பெரும் ஆபத்து, அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். முன்னதாக BJP-வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் தவெக, NDA கூட்டணியில் இணையும் என அமைச்சர் TM அன்பரசன் உள்ளிட்டோர் பேசி வந்தனர்.
News January 14, 2026
நிரந்தர கொரோனா போல் தாக்கும் மத்திய அரசு: ஸ்டாலின்

சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிரந்தர கொரோனா வைரஸ் போல, மத்திய அரசு தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை மீறியும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறிய அவர், நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளை கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திமுக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.


