News January 23, 2025

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: சிபிஐ விசாரணை

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 19இல் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல்லில் உடல் துண்டாகி இளைஞர் பலி!

image

திண்டுக்கல் எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வினோத் மன உளைச்சல் காரணமாக எரியோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு விழுந்து உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2025

கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள்!

image

இந்தியாவில் 28.3 கோடி பேர் கடனில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 2025-ல் மொத்த வீட்டு கடன் ₹15.7 லட்சம் கோடியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு நபரின் சராசரி கடன் சுமை ₹3.4 லட்சத்தில் இருந்து, ₹4.8 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News December 6, 2025

வேள்பாரி பட ஹீரோ ரேஸில் 2 நடிகர்கள்

image

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஷங்கர், மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன்படி, ‘வேள்பாரி’ நாவலை படமாக எடுத்து, அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் ஹீரோவாக சூர்யா (அ) விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் பொருத்தமாக இருப்பார்கள்?

error: Content is protected !!