News June 25, 2024
கள்ளக்குறிச்சி: 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்ததை அடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை, தம்புரான்பட்டு, கழுகுமலை பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!
News March 2, 2026
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 2, 2026
சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


