News June 14, 2024

கல்கி 2898 ஏ.டி. படத்தில் 10 நிமிடம் மட்டுமே வரும் கமல்?

image

பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் கல்கி 2898 ஏ.டி. பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தில் கமல் வில்லனாக நடித்துள்ளார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவலை கமல் இல்லை என்று மறுத்தார். இந்நிலையில், படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கமல் நடித்திருப்பதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 1, 2026

போர் பதற்றம்.. PM மோடி முக்கிய ஆலோசனை

image

மத்திய கிழக்கின் நிலைமைகள் குறித்து விவாதிக்க PM மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இன்று இரவு 10 மணிக்கு கூடுகிறது. இதில் ஈரான் – இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 2 நாள் பயணமாக தமிழகம் வந்த PM மோடி இன்று இரவு டெல்லி திரும்புகிறார்.

News March 1, 2026

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

News March 1, 2026

உதயநிதிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த PM மோடி

image

மதுரை பொதுக்கூட்டத்தில் DCM உதயநிதிக்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் யாரோ ஒருவர் தனக்கும் தனது தந்தைக்கும் பயமில்லை என பேசுவதாக கேள்விப்பட்டேன் என்ற அவர், ஜனநாயக நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்றார். மேலும், என்னிடத்தில் பயமில்லை என ஒருவர் கூறுவதை நான் என் மீதான விமர்சனமாக கருதவில்லை எனவும், மாறாக ஜனநாயகத்தை சரியாக பின்பற்றியதற்கான பாராட்டு என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!